
மறைந்த முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் “கலைஞர் நூற்றாண்டு” விழா நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ALSO READ : தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வு… விளக்கம் கொடுத்த மேலாண்மை இயக்குநர்!!
அதன்படி, தமிழ் திரையுலகம் சார்பில் “கலைஞர் நூற்றாண்டு” விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க வேண்டும் என்று நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். நிர்வாகிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் விழாவில் நிச்சயம் கலந்து கொள்வதாக உறுதியளித்தார்.
அதேபோல், நடிகர் கமல்ஹாசன் அவர்களையும் நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். அவரும் இந்த விழாவில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலக சார்பில் நடைபெறும் ” கலைஞர் நூற்றாண்டு” விழாவில் தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.