நெட் தேர்வு : பாடத் திட்டத்தை புதுப்பிக்க யுஜிசி முடிவு!

Today News In Tamil Nadu NET Exam UGC Decides to Revise Syllabus

இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய நெட் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நெட் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இளநிலை ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்கு தகுதியான உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான நெட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.

ALSO READ : வெறும் 10 நாளில் 400 கோடி வசூலை அள்ளிய “டைகர் 3” படம்..!

நெட் தேர்வு குறித்து யுஜிசி தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நெட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் புதுபிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 82 பாடங்களில் இருந்து தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், புதிய பாடத் திட்டம் அமைப்பது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்ட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதீஷ் குமாா் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, நெட் தேர்வுக்கான புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உரிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் மாணவர்கள் நெட் தேர்வு மற்றும் பாடத்திட்டம் குறித்து பயப்பட தேவையில்லை எனவும் அறிவிருத்ஹியுள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top