தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டை கொள்முதல் விலை..! பொதுமக்கள் வேதனை!!

Today News In Tamil Nadu the price of eggs is continuously increasing

உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த பலரும் பலவிதமான உணவுகளை உட்கொண்டு வருகின்றனர். உடல் ஆரோக்கியம் தரும் முக்கிய உணவுகளில் ஒன்றாக முட்டை உள்ளது. ஏனென்றால் முட்டையில்தான் அதிக சத்துக்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் D மற்றும் கால்சியம் சத்துக்கள் முட்டையில்தான் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர். இதன்காரணமாகத்தான் முட்டையை தினமும் நாம் சாப்பிடும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

பொதுவாக முட்டை என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது நாமக்கல் மாவட்டம்தான். ஏனெனில் நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிகப்படியான முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டை வெளிமாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டை உற்பத்தியின் அளவு மற்றும் அதன் தரத்திற்கு ஏற்ப அவ்வபோது விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ALSO READ : இனி கோவை டூ பெங்களூர் இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவை..!

அந்த வகையில், கடந்த 20 ஆம் தேதி முட்டை கொள்முதல் விலை ரூ.5.50 காசுகளாக இருந்த நிலையில், நேற்று மேலும் காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.85 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுகுறித்து கோழி பண்ணையாளர்கள் கூறுகையில், வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. அதனால் முட்டை கொள்முதல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முட்டை விலையானது ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் முட்டை கொள்முதல் விலை குறைய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், முட்டை கொள்முதல் விலை உயர்ந்து வருவதால் முட்டை விற்பனை விலையும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top