மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதில் புதிய சிக்கல்..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

Today News In Tamil New problem in getting Rs.1000 for womens rights

தமிழகத்தில் “கலைஞர் உரிமைத்தொகை” என்னும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.1000 அவருடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்பொழுது வரை நான்கு மாதத்திற்கான உரிமைத்தொகை குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மகளிர் உரிமைத்தொகையை தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமானோர் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான(டிசம்பர்) மகளிர் உரிமைத்தொகையானது நேற்று அனைவரின் வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டது. மேலும், மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணபித்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதில், தகுதியானர்வர்களுக்கு கடந்த மூன்று மாதத்திற்கான தொகையும் சேர்த்து இந்த மாதம் மொத்தமாக ரூ.4000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ : குரூப் 2 தேர்வு முடிவுகள் : சற்றுமுன் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இதனையடுத்து, வேலைவாய்ப்பற்ற பெண்கள் பலரும் தமிழக அரசின் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இதில் பெரும்பாலான பெண்கள் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையும் பெற்று வருவதால், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை மறுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் சுமார் 570க்கும் அதிகமானோரின் பெயர்கள் வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெறும் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top