மகளிர் உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கு புதிய திட்டம்..! வங்கி வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு!!

Today News In Tamil New scheme for women who buy womens rights announcement by the bank

தமிழகத்தில் பெண்களின் எதிர்கால தேவைக்காவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1 கோடியே 6 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

ALSO READ : தங்கம் விலை ஒரே நாளில் ரூ.200 உயர்வு..! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை வாங்கும் பெண்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கி சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி மகளிர் உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்காக “மலையரசி தொடர் வைப்பு திட்டம்” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அந்த தொகையை இந்த திட்டத்தின் மூலம் சேமித்து வந்தால் அதற்க்கு வட்டி அதிகம் என்று தெரிவித்துள்ளது.

பொதுவான சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி 3 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே பெற முடியும். ஆனால், மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளின் நலனுக்காக நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி ரெகரிங் டெபாசிட் எனப்படும் தொடர் வைப்பு திட்டம் ஒன்றை தொடங்கி இருக்கிறது. இந்த திட்டம் மூலம் பணத்தை சேமிக்க நினைப்பவர்களுக்கு 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top