தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க இன்னும் 5 மீட்டர் மட்டுமே உள்ளது! அதிகாரிகள் தகவல்…

Today News In Tamil Only 5 meters left to rescue 41 distressed workers Officials inform

உத்தரகாண்டில் உள்ள உத்தரகாசி என்னும் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் எதிர்பாராத விதமாக கடந்த 12 ஆம் தேதி அதிகாலை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 தொழிலாளர்கள் மண் சரிவின் நடுவே சிக்கி தவித்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியானது 16 வது நாளான இன்றும் நடைபெற்று வருகிறது.

ALSO READ : UPI மூலம் பணம் அனுப்ப இனி 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

தொழிலாளர்களை மீட்கும் பணியில் டெல்லி மற்றும் ஜான்சி நிபுணர்களும் ஈடுபட்டு உள்ளனர். இதற்கும் முன் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின் போது அடிக்கடி மண் சரிந்து விழுந்து வருவதால் மீட்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் வழியாக பெரிய குழாய்களை செலுத்தி அதன் மூலம் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் இருந்து சுமார் 57 மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இதுவரை 52 மீட்டர் துளையிடப்பட்டுள்ளதாகவும் இன்னும் 5 மீட்டர் மட்டுமே துளையிட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் இன்றைக்குள் மீட்கப்படுவார்கள் என்றும் மீட்கப்படும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கு உதவியாக சாலைகளை சீரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top