ரோஜ்கார் மேளா திட்டம் : 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார் பிரதமர் மோடி!

Today News In Tamil Rojkar Mela Project Prime Minister Modi gives job orders to 51 thousand people

இன்றைய காலக்கட்டத்தில் பலரும் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு கடந்த ஆண்டு ரோஜ்கார் மேளா என்னும் திட்டத்தை தொடங்கியது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஒரு ஆண்டில் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ : தொடர் மழை எதிரொலி : சென்னை பல்கலைகழக தேர்வு ஒத்திவைப்பு!

இந்நிலையில், இந்த திட்டத்தின் முதல் கட்டமாக சுமார் 75 ஆயிரம் பேருக்கு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி நியமன ஆணைகள் அனைத்தும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாவில் மத்திய மந்திரிகள் வழங்கினர். இதனையடுத்து, இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

51 ஆயிரம் பேருக்கு இன்று பணி நியமன ஆணை:

ரோஜ்கார் மேளா என்னும் திட்டத்தின் அடுத்தக்கட்டமாக பிரதமர் மோடி இன்று(வியாழக்கிழமை) காணொலி வாயிலாக மேலும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். பணி நியமன ஆணை வழங்கப்படும் 51 ஆயிரம் பெரும் ரெயில்வே அமைச்சகம், அஞ்சல் துறை, வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பள்ளிகல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக பணி நியமன பெறும் நபர்கள் தங்களது திறனை மேன்மேலும் வளர்த்து கொள்ள அரசின் சார்பில் அதற்கான உரிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனை https://portal.igotkarmayogi.gov.in/ என்னும் இணைய தளத்தில் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top