தொடர் மழை எதிரொலி : 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிப்பு!

Today News In Tamil Schools and colleges in 4 districts have been declared holiday tomorrow due to heavy rains

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயலானது தீவிரமடைந்த காரணத்தினால் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகவே கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக நேற்று புயலின் பாதிப்பு அதிகம் என்பதால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்தது.

புயலின் தாக்கம் குறைய தொடங்கிய நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மழை ஓய்ந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்களும் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ALSO READ : சென்னையில் மின்விநியோகம் எப்பொழுது வழங்கப்படும்..? அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை ஓய்ந்தாலும் வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த பகுதிகளில் மழைநீர் வடிய இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top