அரையாண்டுத் தேர்வு : தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள்

Today News In Tamil Semi-annual Examination One question paper for all Tamil Nadu

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு டிசம்பர் 7 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும் அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ALSO READ : உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் – முதல் மந்திரி அறிவிப்பு

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அந்த சுற்றறிக்கையில், தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவருக்கும் அரையாண்டுத் தேர்வுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக இரண்டு வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கல்வித்துறை வெளியிட்ட அட்டவனையை பின்பற்றி மட்டுமே தேர்வை நடத்த வேண்டும் என்றும் வினாத்தாள்களை பாதுகாப்புடன் பதிவிறக்கம் செய்து தேர்வு நடைபெறும் நாளில் மட்டுமே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்