Today News In Tamil Special camp for correction of voter list on November 25 and 26 in Tamil Nadu

இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் அடையாள அட்டை மற்றும் வாக்களர் அடையாள அட்டை ஆகியவை பார்க்கப்படுகிறது. அவற்றில் வாக்களார் அடையாள அட்டை என்பது 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பொதுத்தேர்தல், மாநிலத் தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு பயன்படுத்தும் ஒரு அடையாள அட்டையாகும். இந்த வாக்களர் அடையாள அட்டையில் புதிதாக் பெயர் சேர்க்கவும், ஏற்கனவே இருக்கும் பெயரை நீக்கவும், புகவ்ரியில் திருத்தங்கள் செய்யவும் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசே சிறப்பு முகாமை நடத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த மாதம் நடைபெற்ற சிறப்பு முகாமில் புதிதாக பெயர் சேர்க்கபட்ட வரைவு வாக்களர் பட்டியல் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி வெளியானது. இந்த பட்டியலானது வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி வரை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ : தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட் : அடுத்த 2 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை!

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்களர் அட்டையில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் வருகிற நவமபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள வாக்குசாவடி மையங்களில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் இந்த முக்கமில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தங்களது பெயரை வாக்களர் பட்டியலில் இணைத்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்