சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73 வது பிறந்தநாள்..! சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பும் ரசிகர்கள்!!

Today News In Tamil Superstar Rajinikanths 73rd birthday Fans are shaking the band on social media

கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த். இவர் பஸ் கண்டக்டராக இருந்து தற்பொழுது இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்றுள்ளார். 70 ஆண்டுகளை கடந்தும் ஒருவர் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது மிகையாகாது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு, வங்காளம் ஆகிய 6 மொழிகளில் நடித்து இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாகியுள்ளார். இவர் இதுவரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து 169 படங்களில் நடித்துள்ளார். இவரை கவுரவிக்கும் விதமாக கடந்த 2000 ஆம் ஆண்டு மத்திய அரசு ரஜினிக்கு பத்ம பூஷன் விருதை வழங்கியது. மேலும், 2016 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும், 2019 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கி சிறப்பித்துள்ளது.

ALSO READ : படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் ஹாப்பி…

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று(டிசம்பர் 12) தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் பலரும் பேஸ்புக், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் Thalaivar 170, SuperStar Rajinikanth, HBD SuperStar Rajinikanth போன்ற ஹாஷ்டேக்களை டிரெண்டிங் செய்து தங்கது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு “தலைவர் 170” படத்தின் பெயர் மற்றும் டீசர் வீடோயோவை இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top