
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகம் மிகவும் பிரபலமான துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது. மீன்பிடிக்க செல்லும் பெரும்பாலான மீனவர்கள் தங்களது படகுகளை இந்த துறைமுகத்தில் நிறுத்தி செல்வது வழக்கம். அதன்படி, நேற்றும் அனைத்து படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று நள்ளிரவு விசாகப்பட்டின மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் ஒரு படகில் பற்றிய தீயானது அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கும் பரவி பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறனர்.
ALSO READ : குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை நயன்தாரா! இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!!
பொதுவாக நீண்ட நாள் படகில் பயணம் செய்து மீன்பிடித்து வரும் மீனவர்கள் தாங்கள் சமைத்து சாப்பிடுவதற்கு கேஸ் சிலிண்டர் கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில், ஒரு படகில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால்தான் இந்த தீ விபத்து காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படகில் பற்றிய தீ அடுத்தடுத்து பரவியதால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.