
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் மோசஸ் என்பவர் தன் மனைவி மற்றும் ஓரு மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மோசஸின் தாயார் மகனின் சொத்தில் தனக்கும் பங்கு உள்ளது என்று நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
மோசஸ் தாயாரின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் தாயாருக்கு மகனின் சொத்தில் உரிமை உண்டு என்று தீர்பளித்தது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மோசஸின் மனைவி இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மோசஸ் மனைவியின் மேல்முறையீட்டை உயர்நீதி மன்றம் விசாரினையை மேற்கொண்டது.
ALSO READ : கோ பட நாயகி கார்த்திகாவுக்கு திருமணம் – பிரபலங்கள் நேரில் வாழ்த்து
மோசஸ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் ஒரு ஆண் மகன் உள்ளது. இந்த சூழ்நிலையில் மோசஸின் தாயார் சொத்தில் பங்கு கேட்பது எந்த விதத்திலும் நியாயமாக இருக்காது என்று கூறி, வாரிசு உரிமை சட்டத்தின்படி மோசஸின் சொத்தில் அவரது தாயார் பங்கு கொண்டாட முடியாது என்று தீர்ப்பளித்தது. மோசஸின் மனைவிக்கு குழந்தைகள் இல்லாத பட்சத்தில் மோசஸின் தாயாருக்கு சொத்தில் பங்கு வழங்கப்பட்டிருக்கும். ஆனால், தற்பொழுது அவர்களுக்கு வாரிசு உள்ள நிலையில் சொத்தில் பங்கு வழங்கப்படாது என்றும் திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது எனவும் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.