
உத்தராகண்டில் சார்தாம் என்று சொல்லப்படும் நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி மற்றும் யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா, பர்காட் இடையே சுமார் 4.5 கி.மீ தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சுரங்கம் அமைக்கும் பணி நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 12 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இருபுறமும் மணல் சூழப்பட்ட நிலையில், சுரங்க பாதையின் நடுவில் 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர்.
ALSO READ : யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த லியோ படத்தின் “நா ரெடி தான்” பாடல்..!
இதனை தொடர்ந்து, சுரங்க பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியானது 10 வது நாளாக இன்றும்(செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. நிபுணர்களின் தொடர் முயற்சி காரணமாக சுரங்க பாதையின் இடிபாடுகள் வழியாக 6 அங்குல குழாய் செலுத்தப்பட்டு அந்த குழாயின் வழியாக கேமரா அனுப்பட்டு சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை வீடியோ எடுத்ததுடன் அவர்களிடம் வாக்கி-டாக்கி மூலம் பேசும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.