
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் இளைய தளபதி விஜய் அவர்கள். இவர் நடித்து கடந்த மாதம் வெளியான “லியோ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார். இவரை போலவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இளைஞர்கள் பலரும் ஒன்று கூடி பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் நூலகங்களை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூலகம் அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக “தளபதி விஜய் நூலகம்” நவம்பர் 18 ஆம் தேதி (நாளை) காலை 10.35 மணியளவில் திறக்கப்பட உள்ளது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர், சிடிஓ காலனி, மேற்கு தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் தொடங்கப்பட உள்ளது.
ALSO READ : வாட்ஸ் அப்பில் வெளியான புதிய அப்டேட்..! இனி Privacy பத்தி கவலையே கிடையாது!!
அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களில் உள்ள 11 இடங்களில் விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது. மேலும், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வருகிற 23 ஆம் தேதி திறக்கபட உள்ளது.