இனி மலேசியாவிற்கு செல்ல விசா தேவையில்லை..! பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Today News In Tamil Visa is no longer required to visit Malaysia by Prime Minister

பொதுவாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் அல்லது வேறு நாட்டிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்ப நினைத்தாலும் அதற்கு விசா அவசியம் தேவைப்படுகிறது. இந்த விசாவை பயன்படுத்தி தான் வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியும். இந்நிலையில், மலேசிய அரசு தற்பொழுது விசா குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மலேசியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை என்றும் மேலும், அவர்கள் 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கலாம் எனவும் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மலேசியா அரசு தங்கள் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், வியட்நாம், தாய்லாந்து மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்பொழுது இந்தியா மற்றும் சீனா சுற்றுலா பயணிகளுக்கும் விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்ப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ : “விஷால் 34” படத்தின் புதிய அப்டேட் – இன்று மாலை வெளியாகிறது

இதுகுறித்து மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சீன தூதரகத்துடன் இணைந்து, 50 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் வகையில், மலேசியா நாட்டு சுற்றுலாப் பயணிகள் சீனாவை சுற்றிப்பார்க்க விசா தேவையில்லை என்றும் விசா இல்லாமல் சீனாவில் 15 நாட்கள் தங்கிக்கொள்ளலாம் என்று சீன அரசு அறிவித்ததற்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும், மலேசியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நாமும் இந்த விசா சலுகையை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top