மிக்ஜம் புயல் பாதிப்பு : ரேஷன் கடைகளில் இன்று முதல் ரூ. 6,000 நிவாரணத்தொகை… இவர்களுக்கெல்லாம் நிச்சயம் முன்னுரிமை!

Today News In Tamilnadu Mikjam storm damage Ration shops from today Rs. 6,000 compensation

வங்கக்கடலில் கடந்த 3 தேதி உருவான மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏராளமான மக்கள் வீடுகளை விட்டி வெளியேறினர். இதனால் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மிகஜ்ம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் மற்றும் நேற்று இதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. இதனையடுத்து, இன்று முதல் மிகஜ்ம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது. இதனை மக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ALSO READ : தமிழ்நாட்டில் 552 புதிய பஸ்… போக்குவரத்துத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மேலும், மிக்ஜம் புயலால் பாதிக்கபட்ட சிலருக்கும் இன்னும் டோக்கன் வழக்கப்படாததால் பலரும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு மாற்றுவழி செய்யப்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் இந்த நிவாரணத்தொகையை வாங்க வரும் மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் மற்றும் கைக்குழந்தையுடன் வருவபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top