புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..! ஒரு சவரன் ரூ.47 ஆயிரத்தை தாண்டி விற்பனை!!

Today News In TamilNadu The price of gold is sold above Rs.47 thousand in a single day

இன்றைய காலக்கட்டத்தில் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. முன்னதாக கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களுக்கு மட்டுமே தங்கம் வாங்கி வந்தனர். ஆனால், தற்பொழுது வீட்டில் நடக்கும் எல்லா விஷேச நிகழ்ச்சிக்கும் தங்கம் வாங்கி வருகின்றனர். இதனால் தங்கத்தின் மதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறதே தவிற குறையவில்லை. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது.

அதன்படி, கடந்த மாதம் முதலே தங்கத்தின் விலையானது ஒரு நாள் ஏறுவதும் மறுநாள் இறங்குவதுமாக இருந்து வந்தது. ஆனால், இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை சற்று ஏறத்தொடங்கியது. சென்னையில் இன்று(சனிக்கிழமை) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

ALSO READ : சென்னை மெட்ரோவில் நாளை ஒரு நாள் சிறப்பு சலுகை..! ரூ.5 மட்டும் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.47 ஆயிரத்து 320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 915 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையை போல வெள்ளியின் விலையும் இன்று(சனிக்கிழமை) உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.83.50 க்கும் கிலோ ஒன்று ரூ.83 ஆயிரத்து 500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top