வாட்ஸ் அப்பில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்..! புதிய அப்டேட்டால் பயனாளர்கள் மகிழ்ச்சி!!

Today News Introducing a new security feature on WhatsApp Users are happy with the new update

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துபவர்களின் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் சுமார் 535 மில்லியின் பயனாளர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், வாட்ஸ் நிறுவனம் பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அவ்வபோது புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.

ALSO READ : ஆதார் கார்டில் மொபைல் நம்பர் இணைப்பது இனி ரொம்ப ஈஸி…

நிறுவனம் வழங்கும் இந்த அப்டேட்டுகள் பயனர்களை எளிதில் கவர்ந்து வருவதால் வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தங்களுடைய வாட்ஸ் அப் கணக்கு பாதுகாப்புடன் இருக்க மொபைல் எண் மூலமாக வெரிஃபிகேஷன் செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு, ஈமெயில் மூலமாகவும் வெரிஃபிகேஷன் செய்யும் முறையை விரைவில் அமல்படுத்த உள்ளதாக நிறுவனம் ஏற்கனவே அறிவித்த நிலையில், இதுகுறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஈமெயில் வெரிஃபிகேஷன் முறை பீட்டா வெர்ஷனில் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்பொழுது அனைத்து iOS பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், இந்த அப்டேட் மூலமா இனிமேல் மொபைல் நம்பர் இல்லாமல் ஈமெயில் வெரிஃபிகேஷன் செய்து வாட்சப் அக்கவுண்ட்டை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top