சென்னையை தொடர்ந்து அமெரிக்காவையும் புரட்டி போட்ட புயல்..! இதுவரை 7 பேர் உயிரிழப்பு!!

Today News Live After Chennai the storm that overturned the United States So far 7 people have lost their lives

கடந்த வாரம் தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியில் மிக்ஜம் புயல் தாக்கியதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த மிக்ஜம் புயல் காரணமாக இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து சென்னை மற்றும் ஆந்திராவில் உள்ள சில பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதிலும் குறிப்பாக ஆந்திராவில் உள்ள ஒரு சில பகுதிகளில் மிக்ஜம் புயலானது பலத்த சூறாவளி காற்றுடன புரட்டி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வந்தது.

இந்நிலையில், சென்னையை தொடர்ந்து தற்பொழுது அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த புயல் காரணமாக அங்கு பலத்த காற்று வீசியது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டனர். மேலும், சாலைகளில் நின்று கொண்டிருந்த வாகனங்களும் தலைகீழாக கவிழ்ந்து கிடந்தன. அமெரிக்காவில் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதுடன் கென்டக்கி, நாஷ்வில்லி, மாண்ட்கோமெரி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழையும் பெய்தது.

ALSO READ : தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 ஆயிரம் போலீஸ் வேலைக்கு 2.50 லட்சம் பேர் போட்டி..!

தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வெள்ளம் காரணமாக பல்வேறு வீடுகளும் இடிந்து விழுந்ததில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 85 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top