ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்… டோக்கன் வாங்க முண்டியடிக்கும் மக்கள்!

Today news Ration card holders Rs.6000 reliefPeople knocking to buy tokens

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும்பாலான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மிகஜ்ம் புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றின் முதற்கட்டமாக, பாதிக்கபட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு வழங்கும் இந்த நிவாரணமானது நாளை(டிசம்பர் 17) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இதில், வருமானவரிசெலுத்துவோர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படாது என்றும் இவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இது தொடர்பான விவரங்களை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விண்ணபங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து அதன் மூலம் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ : மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதில் புதிய சிக்கல்..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

இந்நிலையில், மிக்ஜம் புயல் பாதிக்கப்புகளுக்கான நிவாரணம் பெறுவதற்கான டோக்கன்கள் நேற்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது நாளன இன்றும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்களை வாங்க ஒவ்வொரு ரேஷன் கடையிலையும் அதிகாலை 5 மணியளவில் இருந்தே மக்கள் முண்டியடித்து கொண்டு வரிசையில் நிற்க ஆரம்பித்து விடுவதால் காலை 10 மணி என்ற அளவில் தெரு முழுக்க மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top