வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்… இன்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்பு..!

Today News Southern districts reeling under floods Chance of heavy rain today too

வங்கக்கடலில் கடந்த 3 ஆம் தேதி உருவான மிக்ஜம் புயலால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, ஏராளமானோர் இதனால் பாதிப்பும் அடைந்தனர். இந்நிலையில், தற்பொழுது சென்னை ஒட்டிய பகுதிகளில் மழை ஓய்ந்த நிலையில், மழைநீர் வற்றி வருவதால் படிப்படியாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

ALSO READ : மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதில் புதிய சிக்கல்..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

மேலும், தென்காசி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் தற்பொழுது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தென் தமிழக பகுதிகளில் இன்றும்(திங்கட்கிழமை) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துள்ளது. தென் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழையும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top