மிக்ஜம் புயல் பாதிப்பு : தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதித்துக்கு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Today News Tamil Nadu Chief Minister M. K. Stalin donated his one month salary to the storm relief fund

சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாக கடந்த 3 ஆம் தேதி முதல் தொடர்ந்து இரண்டு நாட்கள் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சென்னை உள்பட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னையில் மழை ஓய்ந்த நிலையிலும், வீடுகளில் தேங்கிய மழைநீர் இன்றளவிலும் வற்றாததால் பெரும்பாலான மக்கள் சாப்பிட உணவுகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு அரசின் சார்பிலும் பல தன்னார்வலர்கள் சார்பிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தண்ணீர் புகுந்த வீடுகளில் இருக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். மிக்ஜம் புயல் சென்னையை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் இதனை சமாளிப்பதற்கான நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்க உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ALSO READ : தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் புயல் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், புயல் நிவாரண நிதிக்காக உதவிய பல்வேறு தரப்பினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும், ஒரு சில பகுதிகளில் பகுதிகளில் மீட்பு பணிகள் துரித அளவில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top