தமிழக அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கான தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு

Today News Tamil Nadu Govt Bus Driver Conductor Exam Results Publish Tomorrow

தமிழக அரசு விரவுப் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்தினர் பணியிடம் குறித்த செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த காலிப்பணியிடங்கள் அனைத்தும் நேரடி நியமனம் மூலமாக மட்டுமே நிரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து கழகத்தில் உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரித்துரைக்கப்பட்டவர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 117 பேருக்கும் எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைகழகம் இணைந்து இந்த எழுத்து தேர்வை கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடத்தியது.

ALSO READ : திருவண்ணாமலையில் குவிந்து வரும் பக்தர்கள் கூட்டம்..! அவசர உதவி எண்களை அறிவித்த காவல்த்துறை!!

இந்நிலையில், ஓட்டுனர் மற்றும் நடத்தினர் காலிப்பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 9 ஆயிரத்து 352 பேர் மட்டுமே எழுத்து தேர்வை எழுதியுள்ளதாகவும் மீதமுள்ள 1,765 பேர் தேர்வு எழுத வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த எழுத்து தேர்வுக்கான விடைக்குறிப்புகள் அண்ணா பல்கலைகழக இணையதளமான https://tancet.annauniv.edu/tancet/setc/index.php என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, எழுத்து தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்கள் நாளை(நவம்பர் 27) காலை 9.30 மணிக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பதிவு எண்ணை பயன்படுத்தி மதிப்பெண்களை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பின் போது கல்வி தகுதி, வயது, சாதி, டிரைவர் மற்றும் கண்டக்டர் உரிமம் மற்றும் உடல் தகுதி ஆகியவற்றில் தகுதியானவர்கள் மட்டுமே ஓட்டுனர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top