தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை : மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய தகவல்!

Today News The health of DMUDI leader Vijayakanth New information released by the hospital

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்பொழுது தே.மு.தி.க கட்சியின் தலைவராக இருப்பவர் விஜயகாந்த். இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகலாவே வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், மீண்டும் உடல்நல குறைவு காரணமாக கடந்த 18 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்கள் ஆன நிலையில், இதுதொடர்பான வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து தே.மு.தி.க தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றுள்ளதாகவும் அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ALSO READ : தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..! வானியலை மையம் வெளியிட்ட தகவல்!!

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மார்பு சளி, இருமல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விஜயகாந்திற்கு பொறுத்தப்பட்ட செயற்கை சுவாசக்கருவி தற்பொழுது அகற்றப்பட்டு இயற்கையாக சுவாசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அவர் ICU வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top