
நாட்டின் மிகப்பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கோடிக்கணக்கான மக்கள் வரவு செலவு கணக்குகள் வைத்து உள்ளனர். ஆன்லைன் பரிவர்த்தனைகள் மிகவும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India – SBI). தற்போது, ஆன்லைன்ல புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
ALSO READ : SBI பேங்க்ல வேலை செய்ய விருப்பமா?
பாரத ஸ்டேட் வங்கியில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ண விருப்பமுள்ளவங்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. வங்கிக்கு செல்லாமலே உங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்கலாம். SBI வங்கியின் இந்த புதிய அறிவிப்பு மக்கள் அனைவருக்கும் சந்தோசமான செய்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவையை பெற, பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்திற்கு சென்று ‘சேமிப்பு கணக்கு’ என்ற ஆப்ஷனுக்கு சென்று தேவையான விவரங்களையும், தேவையான ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு 3 – 5 வேலை நாட்களுக்குள் உங்களுடைய சேமிப்பு கணக்கு திறக்கப்படும்.