
IND Vs AUS: நடப்பு ஆண்டுக்கான 13 வது உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் மோதும் இந்த போட்டியானது இன்றுடன்(நவமபர் 19) முடிவடைகிறது. இந்த உலக கோப்பை போட்டியின் லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்ததால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, நியூசிலாந்து உள்பட நான்கு அணிகள் தகுதி பெற்றது.
ALSO READ : உலகக்கோப்பை இறுதி சுற்று : இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!
உலக கோப்பை போட்டியின் அரையிறுதி போட்டியின் முதல் சுற்றுலேயே இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அறையிருது போட்டியின் அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடியது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதி சுற்று இன்று(ஞாயிற்றுக்கிழமை) குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதி சுற்றின் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி இருக்கிறது.