
நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை போட்டித் தொடர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்டு நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் 10 அணிகள் தலா இருமுறை போட்டியிட்டனர். இதில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இந்திய அணி அரையிறுதிக்கு நுழைந்தது. இந்திய அணியுடன் மேலும் மூன்று அணிகளும் அறையிறுதிக்கு நுழைந்தது. அரையிறுதி போட்டியில் விளையாடிய நான்கு அணிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ALSO READ : ஒரே நாளில் குற்றால அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்..!
இந்நிலையில், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் போட்டியை காண ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதையடுத்து, உலக கோப்பை இறுதிப் போட்டியை ரசிகர்கள் பார்த்து மகிழ சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட பதிவில், உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுவதை காண சென்னை மெரினா கடற்கரை பகுதி மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் பெரிய எல்.இ.டி திரை மூலம் மதியம் 2 மணி முதல் ஒளிப்பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.