WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட்! என்னனு தெரியுமா? உடனே பாருங்க!!!

today Super news out update for WhatsApp users
today Super news out update for WhatsApp users

மக்கள் தற்போது உள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக Whatsapp அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதற்கேற்ப Whatsapp நிறுவனமும் பயனர்களுக்கு புதிய புதிய வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது Whatsapp பயனர்களுக்கு அழைப்புகளின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்க புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்று Whatsapp. தற்போது அந்த நிறுவனம் ஆனது Whatsapp – பில் தனியுரிமை பாதுகாப்பு தேவைப்படும் பயனர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது இந்த வசதியின் மூலம் வாட்ஸாப்ப் பயனர்களின் ஐபி முகவரி பாதுகாப்பு உ டன் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு அழைப்பின் மறுபக்கத்தில் உள்ளவர்களிடம் இருந்து தங்களின் ஐபி முகவரியை பாதுகாக்கிறது.

ALSO READ : வசூல் வேட்டையில் சாதனை படைக்கும் லியோ..! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மேலும் இந்த வசதியின் மூலம் தொடர்பு கொள்ளும் அழைப்புகள் வாட்ஸ்அப் சேவையகங்கள் வாயிலாக ரிலே செய்யப்படும். இதன் மூலம் தங்களின் உண்மையான ஐபி முகவரி மற்றவர்களிடம் இருந்து மறைக்கப்படும். பெரும்பாலான மக்கள் தற்போது பயன்படுத்தும் அழைப்புத் தயாரிப்புகள் பங்கேற்பாளர்கள் இடையே பியர்-டு-பியர் இணைப்புகளைக் கொண்டு உள்ளது. மேலும் இதன் மூலம் வேகமான தரவு பரிமாற்றத்தை அனுமதிப்பதோடு, சிறந்த அழைப்பு தரத்தையும் அனுமதிக்கிறது. இதனால் ஒருவருக்கு ஒருவர் பங்கேற்பாளர்களின் ஐபி முகவரிகளை தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு தனியுரிமை தேவைப்படும் என்பதால் அவர்களுக்காக இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு இந்த வசதி பயன் உள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்