மிக்ஜம் புயல் வெள்ளத்தால் சேதமடைந்த கார், பைக்கை என்ன செய்ய வேண்டும்..? அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன அதிரடி பதில்!!

Today Tamil News Announcement by Minister Thangam regarding the repair of car and bike damaged by storm flood

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக தொடர்ந்து இரண்டு நாட்களாகவே சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளிலும், சாலைகளிலும் சூழ்ந்தது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதில், சாலையோர்டங்கள் மற்றும் வீடுகளில் நிறுத்தி வைத்திருந்த கார், பைக் போன்ற வாகனங்களும் சேதமடைந்ததுடன் பல கார்கள் தண்ணீரில் அடித்து செல்லும் காட்சியும் வெளியானது.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் மழைநீரில் மூழ்கி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக பலரும் வேலையில்லாமல் தவித்து வரும் நிலையில், மழையால் சேதமடைந்த பைக்கை சரி செய்ய அவர்களுக்கு அதிக செலவாகும்.

ALSO READ : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கொட்டபோகும் மழை..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!!

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், மோட்டார் வாகன விற்பனையாளர் சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோருடன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் மனிதாபிமான அடிப்படையில் சேதமடைந்த வாகனங்களுக்கு பழுதுநீக்கும் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் க்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட உதவிடும் வகையில் சேதமடைந்த வாகனங்களை நேரில் சென்று விரைந்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகையினை மக்களுக்கு துரிதமாக வழங்கிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top