பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? கவர்மெண்ட் பஸ்ல டிக்கெட் புக்கிங் தொடங்கியாச்சு!

today tamil news Are you going to your hometown for Pongal Government bus ticket booking has started dont miss it

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கான அரசு விரைவு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. தமிழர் திருநாளம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15 ஆம் தேதி தை பொங்கல், ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படும். வெளி ஊர்களில் வேளை செய்பவர்கள் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல விருப்பப்படுவார்கள். மேலும் அவர்கள் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு பண்டிக்கைக்கு முதல் நாள் 13 ஆம் தேதி அன்று ஊருக்கு செல்ல வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு அரசின் தீவிரம்… வெள்ள நிவாரண தொகையை தொடர்ந்து பொங்கலுக்கு 1000 ரூபாய் பரிசு! வெளியான புதிய தகவல்!

அதனை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் வசதிக்காகவும் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகங்களில் முன்பதிவு இன்று தொடங்கியது. அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர் இன்றே நேரில் சென்றும், இணையதளம் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களுக்கு சென்றும் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்பே பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு தொடங்கப்பட்டுவிடும். அதேபோல் இன்று பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்க அரசு விரைவு பேருந்துகள் மட்டுமின்றி, சிறப்பு பேருந்துகளும் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top