நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை : திண்டுக்கல் பள்ளியில் மாணவர்களுடன் நடனமாடிய கிறிஸ்துமஸ் தாத்தா!

Today Tamil News Father Christmas danced with students at Dindigul school

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்ப்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் ஆண்டுதோறும் மும்மத விழா நடைபெறுவது வழக்கம். மாணவர்களுகிடையே மத ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இந்த விழா நடத்துவது வழக்கம். அதன்படி, இந்த வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிராத்தனை முடிந்தவுடன் கிறிஸ்துமஸ் விழா தொடங்கியது.

இந்த கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பள்ளியில் மேடை அமைத்து அதில் கிறிஸ்மஸ்க்கான குடில் அமைத்து அதில் கிறிஸ்து பிறப்பது போல் குழந்தை ஏசுவின் சுருபம் வைத்து கொண்டாடினர். அதன் பின்னர், தேவதைகள் மற்றும் மூன்று சீடர்களுக்கு கிறிஸ்து பிறப்பை காட்டும் வண்ணம் வால்நட்சத்திரம் வழிகாட்டுதலின்படி சீடர்கள் அதனை பின்தொடர்ந்து வந்து கிறிஸ்து பிறந்த இடத்தை வந்தடைந்தது போல் மாணவர்கள் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தினர்.

ALSO READ : வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்… இன்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்பு..!

மேலும், இந்த நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்கள் அனைவரும் கிறிஸ்துவ பிறப்பை பற்றிய பாடல்களை பாடி மகிழ்ந்தனர். அதன்பின், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு வந்தவரிடம் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர்கள் துள்ளி குதித்தனர். துள்ளி குதித்த குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்புகளை வழங்கினார். பிறகு மேடையில் மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடிய போது பள்ளிக்குழந்தைகள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top