
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று விமர்சியாக கொண்டாடப்பட்டது. பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் விதவிதமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யபடுகிறது. பட்டாசுகள் என்றாலே சிவகாசிதான். ஏனென்றால் சிவகாசி என்ற இடத்தில்தான் பட்டாசுகள் அதிக அளவில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்டுகிறது.
ALSO READ : தீபாவளி பண்டிகை எதிரொலி : சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்துதான் பட்டாசுகள் நாடு முழுவதும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டாசு தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வு, பட்டாசு உற்பத்தியில் தொய்வு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு பட்டாசு உற்பத்தியில் 10 சதவீதம் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாரளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் வைப்பதற்கான உரிமம் தாமதாக வழங்கப்பட்ட காரணத்தால் இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் குறைந்துள்ளதாகவும், மேலும்
இந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.