கார்த்திகை தீபத்திருவிழா : மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடி உயர்வு!

Today Tamil News Kartiga Deepatri Festival The price of flowers in the market has increased sharply

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கார்த்திகை தீபத் திருவிழா உள்ளது. இந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மக்கள் மாலை நேரத்தில் தங்கள் வீடுகளின் வெளிப்புறங்களில் விளக்குகள் ஏற்றி கொண்டாடுவார்கள். அந்த வகையில், தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபத்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோவிகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

ALSO READ : உள்ளுரிலேயே அரசாங்க வேலை செய்ய வேண்டுமா? பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வந்துருக்கு!

அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட இருப்பதால் அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று நிலவரப்படி, மதுரை மாட்டுத் தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800 க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று ஒரே நாளில் 400 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நேற்று செவ்வந்திப்பூ ஒரு கிலோ ரூ.50 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு கிலோ ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பூக்களின் விலையானது தோவாளை பூ மார்க்கெட்டிலும் உயர்த்தப்பட்டுள்ளது. தோவாளை பூ மார்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800 க்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1, 250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top