இனி ஆவினில் ரூ.10 க்கு பால் விற்பனை..! சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!!

Today Tamil News Milk is being sold at Rs.10 from today at Aavin station

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக ஆவின் பால் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த ஆவின் பால் கொள்முதல் நிலையம் மூலம் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு அதனை பதப்படுத்தி தமிழகம் முழுவதிலும் ஆவின் கிளை நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆவின் பாலானது வெளி மாநிலங்களிலும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், ஆவின் நிலையத்தில் பால் மட்டுமல்லாமல் பால் சார்ந்த பொருட்களான பால்காவா, பன்னீர், பால் பவுடர், பாதாம் மில்க் போன்ற பல்வேறு பொருட்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் பாலானது அவற்றின் கொழுப்பு சத்திற்கு ஏற்ப பச்சை, ஆரஞ்சு போன்ற பல்வேறு நிற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ALSO READ : புயல் எதிரொலி : தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

இதனையடுத்து, கடந்த மே மாதம் 9 ஆம் தேதி ஆவினில் மேலும் ஒரு புதிய பாக்கெட் பால்(ஆவின் டிலைட் பால்) சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பாலனது வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு 500 மி.லி பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆவின் டிலைட் பால் பாக்கெட்டின் விலை ரூ.21 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், பொதுமக்கள் பலரும் ஆவின் டிலைட் பாலில் 200 மி.லி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆவின் டிலைட் 200 மி.லி பால் ரூ.10 க்கு இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top