வட்டார கல்வி அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு..!

Today Tamil News Publication of Certificate Checklist for District Education Officers

தமிழ்நாட்டில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணியியாங்களுக்கான தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ : நெட் தேர்வு : பாடத் திட்டத்தை புதுப்பிக்க யுஜிசி முடிவு!

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பட்டயலில் இடம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புப்‌ கடிதம்‌, ஆளறிச்‌ சான்றிதழ்‌ படிவம்‌ மற்றும்‌ சுயவிவரப்படிவம்‌ உள்ளிட்டவை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவங்களை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு கடிதமானது ஆன்லைனில் மட்டுமே அனுப்பி வைகபட்டுள்ளது என்றும் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், விண்ணப்பதாரர்கள் ஏதேனும் கோரிக்கை விடுக்க விரும்பினால் ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ ([email protected] / Toll Free No. 18004256753) வழியாக மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பிற வழிகளில் கோரிக்கை விடுத்தால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ர்பு பட்டியலை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

TN TRB BEO OFFICIAL LIST

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top