
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட பொதுமக்களும் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஜவுளி கடை, பட்டாசு கடை மற்றும் பேக்கரி கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது.
இந்நிலையில், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் தீபாவளி வர இருப்பதால் படிப்பு மற்றும் வேலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வசித்து வருபவர்கள் வெள்ளிக்கிழமை அன்று சொந்த ஊர் செல்ல தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை என்பதால் சொந்த ஊர் சென்றவர்கள் தீபாவளி அன்று இரவே மீண்டும் ஊர் திரும்ப வேண்டியுள்ளது.
ALSO READ : அரசின் புதிய அறிவிப்பு! அங்கன்வாடிக்கு வந்த புதிய உத்தரவு!
இதனால் இந்த தீபாவளி பண்டிகையை முழுமையாக கொண்டாடப்படாமல் போகும் சூழல் ஏற்படும் என்பதால் தீபாவளிக்கு அடுத்த நாள் அதாவது திங்கட்கிழமை அன்று பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஞாயிற்றுக்கிழமை இரவே பெரும்பாலானோர் ஊர் திரும்ப இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், வெளியூர் செல்லும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவம்பர் 13 ஆம் தேதி(திங்கட்கிழமை) பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.