
ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி எழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வெளிமாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர். திருப்பதி கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுதான். அந்த அளவிற்கு லட்டு மிகவும் சுவையாக இருக்கும். திருப்பதி கோவிலின் ஒருநாள் உண்டியல் காணிக்கையே பல லட்சம் என்பதால் இந்த கோவில் உலக பணக்கார கோவிலாக உள்ளது.
இந்நிலையில், தற்போழுது திருப்பதி எழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். இந்த சொர்க்க வாசல் பிரவேசத்தை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
ALSO READ : ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் ‘மாமதுர’ பாடல் வெளியீடு!
திருப்பதி கோவிலில் திறக்கப்பட உள்ள சொர்க்க வாசல் பிரவேசத்தை காண்பதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இன்று(வெள்ளிக்கிழமை) ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், சொர்க்க வாசல் திறப்பை காண 300 ரூபாய் டிக்கெட்டில் நாளொன்றுக்கு 22 ஆயிரத்து 500 பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் இன்று(நமவம்பர் 10) வெளியிடப்பட்ட உள்ளது. அதுமட்டுமல்லாமல், இலவச தரிசன டிக்கெட்டில் நாளொன்றுக்கு 42 aஆயிரத்து 500 பக்தர்கள் வீதம் 10 நாட்களுக்கு 4 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.