தமிழகத்தில் நாளை ஓட்டுனர், நடத்துனர் பணிக்கான தேர்வு..! குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகளை இயக்க உத்தரவு!!

Today Tamil News Tomorrow in Tamil Nadu there will be an exam for driver and conductor jobs

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக இருக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் விண்ணப்பித்தவர்கள் நவம்பர் 19 ஆம் தேதி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் க. குணசேகரன் அவர்கள் சுற்றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு நாளை(நவம்பர் 19) காலை 10 மணி முதல் 12 மணி வரை அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வு நடைபெறுகிறது.

ALSO READ : நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு “டெஸ்ட்” படத்தின் போஸ்டர் வெளியீடு..!

இதில் தேர்வர்கள் சரியான நேரத்தில் தேர்வெழுத வருவதற்கு அந்த வழியே இயங்கும் அனைத்து பேருந்துகளும் கால தாமதம் இன்றி குறித்த நேரத்தில் இய்யக்கப்பட வேண்டும் என்றும் தேர்வர்கள் தேர்வு எழுதிய பின் பேருந்துகளில் ஏற்றி அனுப்ப அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், பேருந்துகளின் முன்புறம் தேர்வுகள் குறித்த விவரங்களை இடம்பெற செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்து பணிமனை அலுவலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்