இன்று டி.என்.பி.சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு…!

0
Today TNBC Group-1 Primary Exam-Today Group 1 Exam

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தமிழ் நாட்டில் உள்ள அரசு காலிபனியிடங்களை நிரப்ப உள்ளதாக கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி அறிக்கையை வெளியிட்டது. இதில், குரூப்-1 தேர்வின் பதவிகளில் உள்ள 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 92 அரசு பணிகளுக்காக காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9.30 மணிக்கு தொடக்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

இதனை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரத்து 115 பேர் 33 தேர்வு மையங்களில் குரூப்-1 தேர்வை எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்க 9 பறக்கும் படை அலுவலர்களும், 7 நடமாடும் குழுவும், 34 ஒளிப்பதிவாளர்களும், 33 கண்காணிப்பு அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், தேர்வு நடைபெறும் மையங்களில் மின்சாரம் தடையில்லாமல் வழங்க மின் வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அவசர உதவிக்காக மருத்துவத்துறை மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தி வைக்கபப்ட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் தேர்வு எழுதுவோர் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளன.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here