தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Today Weather Upadte Rain likely in Tamil Nadu for the next 6 days following Cyclone Mikjam

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்கு “மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டது. இந்த மிக்ஜம் புயலானது சென்னையை ஒரு புரட்டு புரட்டியது மட்டுமல்லாமல் பல பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. இந்த மிக்ஜம் புயலானது கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் அளவில் கரையை கடந்தது.

இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி கேரளாவை நோக்கி வருவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வருகிற 9 ஆம்’ தேதி தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

ALSO READ : சென்னையில் பால் தட்டுப்பாடுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்..!

இதனையடுத்து, லட்சத்தீவு பகுதிகளில் உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று(டிசம்பர் 7) முதல் வருகிற 12 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில், சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top