
இன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொடர்பு குறித்து எத்தனயோ விதமான புதுப்புது செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக இருப்பது வாட்ஸ் அப் செயலி என்று சொன்னால் அது மிகையாகாது. மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வபோது பயனாளர்களை கவரும் வகையில் புதிய புதிய அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தெரியாத நபர்களிடம் இருந்து கால் வரும் பட்சத்தில் அதனை ம்யூட் செய்து கொள்ளலாம். அதுமட்டும்மல்லாமல், ஒரு அக்கவுண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை லாகின் செய்யும் வசதியும் அப்டேட் செய்துள்ளது. அந்த வரிசையில், தற்பொழுது மீண்டும் ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ALSO READ : அரையாண்டுத் தேர்வு : தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள்
அதன்படி, வாட்ஸ் அப்பில் AI முறையின் மூலமாக சேட் செய்யும் வகையிலான புதிய வசதி அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது என்றும் கூடிய விரைவில் அனைத்து பயனாளர்களின் பயன்பாட்டு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்ஸ்டாகிராம் செயலியில் AI வசதி அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்பொழுது வாட்ஸ் அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.