
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளிடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போர் தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கொள்ளப்பட்டனர். அங்கே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இரு பகுதிகளுக்கும் இடையே மக்கள் பயணிக்கவும் தடை விதிக்கபட்டது. இந்த போரில் சுமார் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிந்துள்ளதாகவும் 2 ஆயிரத்து 700 பேர் காணாமல் போய்விட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.
மேலும், இந்த போர் காரணமாக இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு சுமார் 240 பேர் பணய கைதிகளாக பிடுத்து செல்லப்பட்டு உள்ளனர். பணய கைதிகளாக இருக்கும் மக்களை மீட்கும் பணியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலில் இருந்து பிடித்து செல்லப்பட்ட 240 பணய கைதிகளை விடுவிக்க கோரி அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் 2.9 லட்சம் பேர் பேரணியாக சென்றனர்.
ALSO READ : மறைந்த சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர்!!
அந்த பேரணியில் லைவ் வீடியோ ஒன்றில் இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் பேசுகையில், பணய கைதிகளாக பிடிபட்டு இருக்கும் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை விடுவிக்க இவர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த பேரணியானது உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு யூதரும் பாதுகாப்புடன் வாழ்வதற்காக நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவில் நடைபெற்ற இந்த பேரணியில் பெரும்பாலும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த மாணவ, மாணவிகள் பணய கைதிகளுக்கு ஆதரவாக வாசங்களை எழுதியும் ஆடைகளை அணிந்தும் பேரணியில் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் அதிக அளவு மக்கள் கூடி பேரணி நடத்திய நிகழ்வாக இந்த பேரணி உள்ளது. இந்த பேரணியில் அதிகப்படியான மக்கள் கூடியதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.