
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த சூழ்நிலையில், கடந்த 12 ஆம் தேதி காலை 4 மணியளவில் யாரும் எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சுரங்கத்தின் இருபுறமும் மண்கள் சரிந்து விழுந்ததில் அதன் நடுவே 41 தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டனர். சுரங்க விபத்தில் சிக்கி கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் அரசுத்துறை நிபுணர்கள் இரவு பகலாக தொடர்ந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சுரங்கத்தில் மண் சூழப்பட்ட இடங்களில் துளையிட்டு அதன் மூலம் அவர்களை மீட்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மூச்சு விடவும் அவர்களுக்கு உணவு வழங்கவும் சுரங்கப்பாதையில் துளை போடப்பட்டு அதன் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10 வது நாளன இன்று சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதற்கான ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.
ALSO READ : கார்த்திகை மாத பிறப்பு : காய்கறிகளின் விலை கடும் உயர்வு!
இந்த வீடியோவானது இடிபாடுகள் வழியாக செலுத்தபட்ட 6 அங்குல குழாய் வழியாக கேமரா செலுத்தப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோவாகும். அதன் வழியே வாக்கி டாக்கியும் செலுத்தப்பட்டதால் அதன் வழியாக தொழிலாளர்களும் பேசினார். இந்த வீடியோவை வெளியிட்ட உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விரைவில் அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு நம்பிக்கை தெரிவித்தார்.