உத்தரகாண்ட் சுரங்க விபத்து : 41 தொழிலாளர்களும் நாளை அதிகாலைக்குள் மீட்பு

Today World News Uttarakhand mine accident 41 workers rescued by tomorrow morning

உத்தரகாண்டில் உள்ள உத்தரகாசி என்ற பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த சுரங்கப் பாதை பணியின்போது கடந்த 12 ஆம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருபுறமும் மண் சூழப்பட்ட நிலையில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். இவர்களை மீட்கும் பணியானது 11 வது நாளான இன்றும்(புதன்கிழமை) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சுரங்கப் பாதையின் கிடைமட்ட பகுதியில் இருந்தும், சுரங்கத்தின் செங்குத்து பகுதியில் இருந்தும் துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில், கிடைமட்ட துளை மூலமாக சுமார் 39 மீட்டர் குழாய் தற்பொழுது வெற்றிகரமாக உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. இந்த குழாயானது 45-50 மீட்டர் உள்ளே செலுத்தும் வரையில் எங்களால் தொழிலாளர்களை மீட்கும் நேரத்தை சரியாக கணிக்க முடியாது என்றும் இன்று அல்லது நாளைக்கும் அனைத்து தொழிலாளர்களும் மீட்பதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ : அரசு ஊழியர்களின் ஓய்வுதிய வயது 60 லிருந்து 62 ஆக உயர்வு – ஈரான் அரசு அறிவிப்பு

இதுகுறித்து மீட்பு பணி அதிகாரி பாஸ்கர் குல்பே கூறுகையில், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் நலமுடன் இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் இன்று இரவு அல்லது நாளைக்குள் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தார். மேலும், 900 மீ குழிக்குள் 800 மீ குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதால் இன்னும் சிறிது தூரம் மட்டுமே தோண்ட உள்ளதால் இன்று இரவுக்குள் மீட்பு பணி நிறைவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top