தமிழர்களின் பாரம்பரியத்தின் பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாள் சூரியன் பொங்கல் கொண்டாப்படுகிறது. அதனை தொடர்ந்து, இரண்டாம் நாளில் மாட்டு பொங்கல் கொண்டாப்படுகிறது. மாட்டு பொங்கல் கொண்டாடுவதற்கான முக்கிய காரணங்களை பாப்போம்.
பொதுவாக மனிதர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட விலங்கு இனங்களில் பசு இன்றியமையாததாக இருந்து வருகிறது. மேலும், பசுவை வாயில்லாத ஜீவன் என்றும் சொல்வார்கள். அதுமட்டுமல்லாமல் மாடுகள்தான் அம்மா என்று சொல்லி அழைக்கும். அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் பாலூட்டி சீறுட்டி தன் குழந்தைகளை காப்பவள் ஆகும். பசு தனது குழந்தைகளை மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் பால் தருகிறது. மனிதன் உயிர் போன பின்பும் அவர்களுக்கு பால்தான் ஊற்றுகிறார்கள் அந்த வகையில் மனிதர்களோடு ஒருங்கிணைந்த விலங்காக பசு இருக்கிறது.
மேலும், விவசாய நிலங்களுக்கு உழுவுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் காளைகளை பயன்படுத்துகிறோம். இதற்கெல்லாம் நன்றி சொல்லும் வகையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டு பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளில் அழகாக வர்ணம் தீட்டி, மாட்டின் கழுத்தில் மணி மற்றும் வேட்டி கட்டி அந்த மாட்டிற்கு மேலும் அழகு சேர்ப்பர்.
மேலும், மாடுகள் கட்டப்பட்டிருக்கும் மாட்டு கொட்டலின் முன் பொங்கல் வைத்து அதனை அந்த மாட்டிற்கு படையல் போட்டு வழிபடுவது மட்டுமல்லாமல் பொங்கல் பானையிலிருந்து பொங்கி வரும்பொழுது ஒரு சிலர் பட்டிபெருக பால் பானை பொங்க என்றும் வேறு சிலர் பொங்கலோ பொங்கல் என்றும் குலவையிடுவர். படையில் போட்டு இறைவனை வழிப்பட்ட பின் பசு மாட்டினை கோவிலுக்கும், காளை மாட்டினை மஞ்சுவிரட்டுக்கும் அழைத்துச் செல்வர்.