உருமாறிய கொரோனா வைரஸ்..! அரசு மருத்துவமனையில் முன்னிச்சரிக்கை நடடிவடிக்கை தயார்!

Transformed corona virus Precautionary procedure is ready in the government hospital-In Transformed Corona Virus Government Hospitals Are Ready

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் இதுவரை மொத்தம் 228 நாடிகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்தது. அதன்பின் இந்த கொரோனா வைரஸ்யை ஒழிக்க கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதனால் கடந்த சில மாதங்களாகவே கொரொனோ பாதிப்பு சற்று குறைவாகவே காணப்பட்ட நிலையில், தற்பொழுது பி.எப்.7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி வருவதால் மீண்டும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இந்த உருமாறிய கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ளதால் இந்தியாவில் அதிகமாக பரவாமல் தடுக்க மத்திய சுகாதாரத்துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லையில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக போதுமான படுக்கை வசதி, ஆக்ஸிசன் வசதி தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதா என்று மாவட்ட சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here