தீபாவளி பண்டிகை எதிரொலி : ஒரே நாளில் கடைவீதிகளில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்!

Trending news Diwali festival echoes Crowds of people thronged the shopping streets in one day

தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் குதுகலம்தான். ஏனென்றால் இந்த தீபாவளியில்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்தும் பட்டாசுகளை வெடித்தும் தீபாவளியை கொண்டாடுவார்கள். இதனால்தான் தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிடித்த பண்டிகையாக உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட பொதுமக்களும் தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக மொத்த விற்பனையகங்கள், சில்லறை விற்பனை கடைகள், அங்காடிகள் உள்ளிட்ட கடை வீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டி வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் உள்ள மாசி வீதிகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் வழக்கத்திற்கும் மாறாக அதிகமாக காணப்படுகிறது.

ALSO READ : IND Vs SA : வெற்றி வாய்ப்பை சூட போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

மதுரை மாசி வீதிகளில் ஜவுளி கடைகளும், வீட்டு உபயோக பொருட்கலுக்கான கடைகள் என அனைத்து விதமான கடைகளும் உள்ளது. இதனால் இந்த தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கவும், வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மாசி வீதிகளில் மட்டுமல்லாமல் சாலையோர கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதில் குறிப்பாக, மேலமாசி வீதி, கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த கூட்டத்தில் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதால் சி.சி.டி.வி. கேமரா, கண்காணிப்பு கோபுரங்கள் மூலமாக கண்காணிப்பு பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…