
தமிழ் சினிமாவில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கபட்டு ரிலீஸ்க்கு தாயராக உள்ள திரைப்படம்தான் நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் “தங்கலான்”. இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை இப்படத்தை பார்க்க ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தங்கலான் படத்தில் சியான் விக்ரமுடன் இணைந்து பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப்படம் குறித்து அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகும் தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பல மடங்கு அதிகரிக்க செய்து வருகிறது.
ALSO READ : நாளை வெளியாக இருக்கும் “ஜிகர்தண்டா 2” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் உருவாகி வரும் தங்கலான் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, தங்கலான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் இப்படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரானது இதுவரை யூடியூபில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு இந்த போஸ்டரை பகிர்ந்து திறக்கப்பட்ட வரலாற்றின் பெட்டகம் என்று குறிப்பிட்டுள்ளது.