தமிழக மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வின் தற்காலிக விடை வெளியீடு!

TRUST Exam 2022 DGE Tamil Nadu Results: தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த டிசம்பர் 17ம் தேதி அன்று ஊரக திறனாய்வு தேர்வுகள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புற மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற நடைபெற்றது. தற்போது இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடுகள் அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணையதள முகவரியில் https://tnschools.gov.in/dge/ வெளியிடப்பட்டுள்ளது.

TRUST Exam 2022 DGE Tamil Nadu Results
TRUST Exam 2022 DGE Tamil Nadu Results

விடைக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பை தொடர்வதற்காக அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே எழுத தகுதியுடைவர்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாவட்டத்திற்கு தலா 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை பெறுவார்கள்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் இந்த விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை டிசம்பர் 31ம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Answer


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here